வருடா
வருடம் சென்னையில் தை மாதத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி சிறப்பான ஒன்றாகும்.
இப்
புத்தகத் திருவிழாவை முன்னிட்டுப் பதிப்பகங்கள் பல் வேறு புதிய புத்தகங்கள்
வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
வாசித்தலை
நேசிக்கும் தமிழ் வாசகர்களிற்காக 2008 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகும்
அனைத்துத் தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவலை ஓரிடமாக அமைக்கும்
நோக்கில் நாம் இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளோம்.
முடிந்தவரை
நாம் தமிழ் வாசகர்களிற்காக அனைத்துப் புதிய புத்தகங்களையும் பட்டியலிட
முயற்சிக்கிறோம். பதிப்பகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இம்முயற்சி
சிறப்பாக அமையும் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்களாக.